உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டாமாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு கல்வித் துறையில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2026–27ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாமாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு, புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் சேர விரும்புவோர் மேல்நிலைப்பள்ளி தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கு வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்ச வயது 29 இருக்கு வேண்டும். அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. லாஸ்பேட்டை தொல்காப்பியர் வீதி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வரும் 18ம் தேதி முதல் அடுத்த மாதம் 19ம் தேதி வரை அலுவலக நாட்களில் விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான நகல் சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் 22ம் தேதி  மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !