உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கம்பங்களில் தாறுமாறாக செல்லும் கேபிள்கள் பறிமுதல் செய்யப்படுமா?

மின் கம்பங்களில் தாறுமாறாக செல்லும் கேபிள்கள் பறிமுதல் செய்யப்படுமா?

உரிய அனுமதியின்றி மின்கம்பங்களில் தாறுமாறாக கொண்டு செல்லப்படும் கேபிள்களை அகற்ற வேண்டும்.புதுச்சேரி நகரின் பிரதான சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களில் தெரு விளக்குகளுக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களின் டி.வி., கம்பி வடங்கள், கேபிள் டி.வி., ஒயர்கள், பிராண்டுபான்ட் ஒயர்கள் எந்தவித முன் அனுமதியின்றி கண்டமேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்துடன் அதிக எடையுள்ள கேபிள் 'டிவி' உபகரணங்களும் கட்டப்பட்டு இருக்கிறது.கேபிள் டி.வி., ஒயர்கள், 2011ல் வீசிய தானே புயலில் ஏராளமான மின்கம்பங்கள் கீழே விழுவதற்கு காரணமாக இருந்தன. தானே புயலில் பாடம் கற்ற பிறகும், கேபிள் 'டிவி' ஒயர்களை கொண்டு செல்லும் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பிரதான சாலைகளில் கேபிள் 'டிவி' ஒயர்கள் அலங்கோலமாக தொங்கிக்கொண்டுள்ளன. இவை நகரின் அழகை கெடுத்து வந்த நிலையில், தற்போது சாலையில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நகரில் பல இடங்களில் அலங்கோலமாக தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கேபிள் டி.வி., நிறுவனங்களின் ஒயர்களை உள்ளாட்சி துறையும், மின் துறையும் இணைந்து ஒழுங்குபடுத்த வேண்டும். அனுமதி பெறாத கேபிள் ஒயர்களையும், டிஜிட்டல் உபகரணங்களையும் அகற்ற வேண்டும். மேலும் கம்பி வடங்களுக்கு உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகையும் வசூலிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை