உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி: செல்லிப்பட்டு பள்ளி அருகே விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, செல்லிப்பட்டு அரசு பள்ளி அருகேயுள்ள பெட்டிக் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, இரண்டு பெட்டிக் கடைகளில் ஆன்ஸ், கூல் லீப், சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.   குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, கடைகளின் உரிமையாளர்கள் செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பட்டுராஜா, 48; செல்வ முருகன் நகரை சேர்ந்த உமாபதி, 52; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 5,200 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை