மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகையில் தேசிய கொடியேற்றம்
16-Aug-2024
புதுச்சேரி : மத்திய அரசு திட்ட பெயர்களை வட்டார மொழிப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டார். புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று மாகி சென்றார். அவருக்கு மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் காவலர் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னரை, சபாநாயகர் செல்வம், ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், மண்டல நிர்வாக அதிகாரி மோகன் குமார், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.தொடர்ந்து மாகி நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மண்டல நிர்வாக அதிகாரி காணொலி காட்சி மூலமாக நிர்வாக செயல்பாடுகள் குறித்து விவரித்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கவர்னர் கேட்டறிந்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய கைலாஷ்நாதன் பேசுகையில், 'மத்திய அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில், 'மக்கள் அதிகம் பயனடையும் வகையில் திட்டப் பெயர்களை வட்டார மொழிப்படுத்த வேண்டும். மாகி பகுதியை சிறந்த சுற்றுலா பகுதியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாகி பகுதியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்ததும் வகையிலான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக, மாகி பகுதியை புனரமைப்பு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
16-Aug-2024