உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிகளிடம் சில்மிஷம்: சென்னை வாலிபர்கள் கைது

மாணவிகளிடம் சில்மிஷம்: சென்னை வாலிபர்கள் கைது

அரியாங்குப்பம்: புதுச்சேரியிலிருந்து பஸ்சில் சென்ற மாணவிகளிடம் சில்மிஷம் செய்த, சென்னையை சேர்ந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பஸ் நிலை யத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று கடலுாருக்கு புறப்பட்டது.பஸ்சில் மது போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள், சீட்டில் அமர்ந்து வந்த சில மாணவிகளிடம் சில்மிஷம் செய்துகொண்டு வந்தனர். இதனை பார்த்து கோபமடைந்த பயணிகள், இரண்டு வாலிபர்களையும் எச்சரித்து தர்ம அடி கொடுத்தனர். பஸ், தவளக்குப்பம் சந்திப்பு வந்தவுடன், அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசாரிடம், இரு வாலிபர்களையும் ஒப்படைத்து விட்டு, நடந்த சம்பவத்தை, பயணிகளும், அந்த மாணவி களும் போலீசில் கூறிவிட்டு, பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.இதனையடுத்து, இரண்டு வாலிபர்களை யும், போலீஸ் ஸ்டேஷ னுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சென்னை, அயனாவரத்தை சேர்ந்த ராகவா, 22; சதீஷ், 23, என்பதும், பட்டதாரியான, இவர்கள், கடலுாரில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை