உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தெரு விளக்கு சீக்கிரம் நிறுத்தம் வில்லியனுார் கோட்டைமேடு சாலையில் தெரு விளக்கு பொழுது விடிவதற்குள்ளே நிறுத்தப்படுகிறது. மாணிக்கம், கோட்டைமேடு. குண்டும் குழியுமான சாலை காராமணிக்குப்பம் ரயில்வே கிராசிங் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பாரதி, காராமணிக்குப்பம். சாலை பணியை துவக்க வேண்டும் வில்லியனுார் பகுதியில் தேர்தலுக்கு முன்பு சாலை அமைக்க பூஜை போடப்பட்டு, பணிகள் துவக்காமல் உள்ளது. ரஜினிமுருகன், வில்லியனுார். குடிமகன்களால் மக்கள் அச்சம் புதிய பஸ் நிலைய வளாக பகுதியில் மது குடிப்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். பாஸ்கர், புதுச்சேரி. மின் விளக்கு எரியவில்லை அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்கு எரியாமல் இருளாக உள்ளது. ஜெயலட்சுமி, அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை குமரகுருபள்ளம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சாய் அர்ஜூன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !