உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., ரத்த தான முகாம்

தி.மு.க., ரத்த தான முகாம்

புதுச்சேரி : தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி தி.மு.க., சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்த முகாமை மாநில அமைப்பாளர் சிவா துவக்கி வைத்தார். அவை தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி உட்பட பல்வேறு அணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சண்குமரவேல், லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொகுதி செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை