கடன் பிரச்னையில் டிரைவர் தற்கொலை
புதுச்சேரி: கடன் பிரச்னையில் டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொத்தபுரிநத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் ராமலிங்கம் மகன் ராஜாமாணிக்கம், 35; டிரைவரான இவருக்கு குடிபழக்கம் உள்ளது. இவர் லோன் மூலம் மினி டிராக்டர் வாங்கி, சரியாக தவணை கட்டாததால், அது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜமாணிக்கம் குடும்ப செலவிற்காகவும் கடன் வாங்கியுள்ளார். மேலும் கடன் பிரச்னையில், கடந்த ஒரு ஆண்டிற்கு முன் தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன், இவரது மனைவி, அவரது தாய் வீடான திருச்சிக்கு சென்று விட்டார். ராஜமாணிக்கம் மட்டும் தனியாக வீட்டில், இருந்தார். நேற்று முன்தினம் மாலை தாயார் இந்திராணி, ராஜமாணிக்கத்தை பார்க்க சென்றபோது, அவர் வீட்டில் துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.