மேலும் செய்திகள்
இடிந்து விழுந்த அங்கன்வாடி மையம்
09-Jun-2026
புதுச்சேரி: பாண்டிச்சேரி உளவியல் சங்கம் சார்பில், வீராம்பட்டினம் அங்கன்வாடியில், போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாண்டிச்சேரி உளவியல் சங்கம் சார்பில், போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பதாகை மற்றும் போஸ்டர்களை, புதுச்சேரியில் உள்ள அனைத்து அங்கன்வாடியிலும், ஆசிரியை முன்னிலையில் ஓட்டி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்டமிட்டுள்ளது. இதற்கு, பேபி சாரா சிறப்பு குழந்தைகள் இல்லம், வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கால்நடை கிளினிக் இணைந்து பாண்டிச்சேரி உளவியல் சங்கத்திற்கு நிதியுதவி அளித்த உதவி செய்தனர். அதன்படி, போதை பொருள் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டும் துவக்க நிகழ்ச்சி வீராம்பட்டினம் அங்கன்வாடி மையத்தில் நடந்தது. அங்கன்வாடி ஊழியர், பேபி சாரா நிறுவனத்தினர், பாண்டிச்சேரி உளவியல் சங்க நிர்வாகிகள், வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கால்நடை நிறுவனர்கள் மற்றும் கஸ்துாரிபா பெண்கள் கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டு, போதை பொருள் பற்றிய போஸ்டர்களை ஒட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
09-Jun-2026