உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதைபொருள் ஒழிப்பு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

போதைபொருள் ஒழிப்பு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

வில்லியனுார்: கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், பொதுமக்களிடையே போதைப் பொருள்களின் தீமைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எல்லையம்மன் கோவில் அருகே வில்லுப்பாட்டு மற்றும் தெருமுனைப் பிரசாரமும் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திருக்காமேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளியின் துணை முதல்வர் முரளி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நல பாதிப்புகளை எடுத்துரைக்கும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியைகள் செய்திருந்தனர். மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர். பள்ளி பொறுப்பாசிரியர் எழில்மாறன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை