மேலும் செய்திகள்
இந்தியாவின் வெற்றியால் உலகம் பயன் பெறும்: பிரதமர் மோடி உறுதி
2 hour(s) ago | 1
விருத்தாசலம், : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்திருந்த பழைய கோப்புகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள கணினி அறையில், டி.இ.ஓ., (இடைநிலை) அலுவலகத்தில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு கணினி அறையில் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கோப்புகள் பெரும்பகுதி எரிந்து சேதமடைந்தது.
2 hour(s) ago | 1