மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
31-Aug-2024
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
31-Aug-2024
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கோட்டக்குப்பம் உட்கோட்ட டி.எஸ்.பி., சுனில் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சிவராஜன், பாலமுரளி, பாபு, சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், விநாயகர் சிலை வைப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். புதிதாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கிடையாது. விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த மூன்றாவது நாளில் எடுத்து விட வேண்டும். 10 அடிக்குள் விநாயகர் சிலை இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் போலீசார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விநாயகர் சிலை வைத்து வழிபடுவோர் பங்கேற்றனர்.
31-Aug-2024
31-Aug-2024