உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரம் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

சாரம் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

புதுச்சேரி : சாரம் முத்துவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை 6.00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு முத்துவினாயகர் மூஷிக வாகனத்தில் வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை, உபயதாரர் கணபதி, கதிர், கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன், அர்ச்சகர்கள் சிவராமன் சிவாச்சார்யார், கார்த்திகேயன் குருக்கள், முத்துகுமாரசாமி அர்ச்சகர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !