உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய தொழிற்சாலைக்கான திட்ட வரைவை உருவாக்க கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவு

புதிய தொழிற்சாலைக்கான திட்ட வரைவை உருவாக்க கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவு

புதுச்சேரி: சேதராப்பட்டு கரசூர் தொழிற்பேட்டையில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் புதிய தொழிற்சாலைகளைத் துவங்குவதற்கான திட்ட வரைவை உருவாக்க வும், அதற்கான உள்கட்ட மைப்பை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொழிற்சாலை ஒன்றை பார்வையிட்டு தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஊதியம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது அமைச்சர் சாய்சரவணன்குமார், தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு, சேதராப்பட்டு தொழிற்சாலைகள் சங்க தலைவர் நாராயணன் திருப்பதி உடனிருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை