உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா பொருட்கள் பறிமுதல்

குட்கா பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி: கருவடிக்குப்பம் இடுகாடு அருகே விற்பனைக்காக கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருவடிக்குப்பம், சுடுகாடு அருகேயுள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தபோது, ஆன்ஸ், கூல் லீப், சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 570 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, கடையின் உரிமையாளர் கருவடிக்குப்பம், கால்நடை மருத்துவமனை வீதியை சேர்ந்த ஸ்ரீதர், 36; மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !