கைவினை பொருட்கள் கண்காட்சி நிறைவு
புதுச்சேரி : கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.புதுச்சேரி கைவினை கவுன்சில் மற்றும் இந்திய கைவினை கவுன்சில் இணைந்து கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சியை காந்தி திடல் அருகே உள்ள விற்பனை கூடத்தில் கடந்த 21ம் தேதி துவக்கின.இந்த கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசின் விருதுகள் பெற்ற கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள், கைத்தறி, வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைத்திருந்தனர்.இதன் கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு கண்காட்சியில் சிறந்த அரங்கு அமைத்தவருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். புதுச்சேரி கைவினை கவுன்சில் பொருளாளர் ஜோதி வர்மா நன்றி கூறினார்.