உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாரிசுதாரர் நல சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

வாரிசுதாரர் நல சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி : சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் நல சங்கத்தினர் பணி வழங்க கோரி 17 வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஏற்படும் காலி பணியிடங்களில், 5 சதவீதம் பணி வழங்க வேண்டும், அனைத்து வாரிசுதாரர்களுக்கும் ஒருமுறை தளர்வு அளித்து, கருணை அடிப்படையில் வாரிசுதாரர் பணி நியமனம் செய்ய வலியுத்தி, புதுச்சேரி சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் நல சங்கத்தினர், துறை இயக்குநர் அலுவலகம் எதிரே, கடந்த மாதம் 10ம் தேதி காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.நேற்று 17 வது நாளாக போராட்டம் நடந்தது. சங்க ஒருங்கிணைப்பாளர் டேவிட், இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினர். வாரிசுதாரர்கள் குடும்பத்தினருடன் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காங்.,மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, அரசு ஊழியர் சம்மேளனத்தின் கவுரவ தலைவர் பிரேமதாசன் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி