உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விம்ஸ் மருத்துவமனையில் சர்வதேச கருத்தரங்கு

விம்ஸ் மருத்துவமனையில் சர்வதேச கருத்தரங்கு

புதுச்சேரி : விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை பொது சுகாதார பிரிவு சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.பல்கலைக்கழக வேந்தர் கணேசன் ஆலோசனையின்படி நடந்த கருத்தரங்கை, துறை டீன் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளர்களான தைவான் தாஜன் பல்கலை பேராசிரியர் அகோரமூர்த்தி, பெங்களூரு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் 'சி' பிரிவு விஞ்ஞானி திலகவதி, மும்பை ஐ.ஐ.டி., கிராமப்புற தரவு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு ஆய்வக இயக்குனர் பென்னன் சின்னசாமி, சென்னை எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பொது சுகாதார பிரிவின் உதவி பேராசிரியர் கீதா ஆகியோர் இணையவழியில் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.கருத்தரங்கில் துறை சார்ந்த அனைத்து முதுகலை பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை மற்றும் பட விளக்க காட்சி போட்டிகள் நடத்தி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை துறை பொது சுகாதார பிரிவின் பேராசிரியர் தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் பிரியங்கா, திவ்யா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ