மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி, : மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லுாரியில்,சென்னை வெர்டெக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.கல்லுாரி முதல்வர் மலர்க்கண் முகாமினை துவக்கி வைத்தார். இதில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.சென்னை வெர்டெக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மனிதவளத்துறை மேலாளர்கள் விஜய் ஆனந்த், ரகுவீர் கலந்து கொண்டு, நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் புதுச்சேரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இருந்து 2024ம் ஆண்டு இறுதி ஆண்டு படிக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி , இக்கல்வியாண்டில் இதுவரை 401 மாணவ மாணவிகளுக்கு, டி.சி.எஸ்., ஸோஹோ, கார் டெக்னாலஜிஸ், ரெனால்ட் போன்ற 52 பன்னாட்டு மற்றும் புகழ் பெற்ற நிறுவனங்களில் 85 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து, மொத்தம் 622 பணி நியமன ஆணைகளை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago