உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொடர் மருத்துவ கருத்தரங்கம் 

தொடர் மருத்துவ கருத்தரங்கம் 

புதுச்சேரி: இந்திய மருத்துவச் சங்கம் புதுச்சேரி, சென்னை சிம்ஸ் மருத்துவமனை (எஸ்.ஆர்.எம். மருத்துவ அறிவியல் கழகம்) சார்பில், தொடர் மருத்துவக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. புதுச்சேரி ஹோட்டல் சாண்ட்ஸ் பாயிண்ட்டில் நடந்த கருத்தரங்கிற்கு, இந்திய மருத்துவச் சங்க புதுச்சேரி செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் சிம்ஸ் மருத்துவமனையில் இருதய நோய் நிபுணர் ஜெய் சங்கர் இயல்பான ஈ.சி.ஜி., மற்றும் அதன் மாறுபாடுகள், சீரான ரத்த ஓட்டம், இருதய வீக்கம், அடைப்பு, திசு இறப்பு ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார். அரசு பொது மருத்துவமனை டாக்டர் ஆனந்தராஜா பங்கேற்று, சீரற்ற இருதயத் துடிப்பு குறித்தும், சிம்ஸ் மருத்துவமனை டாக்டர் ராஜிவ் திலக் இருதய மற்றும் மார்பக அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் விளக்கம் அளித்தனர். கருத்தரங்கில், இந்திய மருத்துவ சங்கத் துணை தலைவர் மேனகா கார்மேகம், சிம்ஸ் மருத்துவமனையின் மார்கெட்டிங் இயக்குநர் டி.கே.சி. பிள்ளை, துணை இயக்குநர் கோடீஸ்வரன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை