மேலும் செய்திகள்
கணவன் மாயம்: மனைவி புகார்
18-Jul-2026
பாகூர்: காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி ராஜஸ்ரீ,38; இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் குரு தட்சணாமூர்த்தி, 10ம் வகுப்பு முடித்துள்ளார். இவர், அவ்வப்போது, எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்று வந்தார். வீட்டில் இருக்கும் நேரங்களில் மொபைல் போனில் மூழ்கி கிடந்தார். அதனை அவரது தாய் கண்டித்தார். இதனால், கடந்த சில தினங்களாக மன வருத்தத்தில் இருந்த குருதட்சிணாமூர்த்தி கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜஸ்ரீ அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார், வழக்குப் பதிந்து, குரு தட்சணாமூர்த்தியை தேடி வருகின்றனர்.
18-Jul-2026