உறுப்பு தானம் விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் 16வது இந்திய உறுப்பு தான தினத்தை முன்னிட்டு உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை இயக்குநர் செவ்வேள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷர்தன் ஷர்மா, குறைதீர்வு அதிகாரி ரவி, உறுப்பு தான நோடல் அதிகாரி குமார், இணை இயக்குநர் மணிகண்ட பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் மதர் தெரசா கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்று உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த 31ம் தேதி நடந்த உறுப்பு தானம் குறித்த ரீல்ஸ் மற்றும் போஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த தொடர் செவிலியர் கல்வி நிகழ்ச்சியில், இதுவரை உறுப்பு தானம் செய்த 8 பேரின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.