ஓவியப்போட்டி பரிசளிப்பு
புதுச்சேரி: சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம், புதுச்சேரி ஓவிய பள்ளி இணைந்து மாணவர்களுக்கான ஓவிய போட்டியை நடத்தின. 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் இபேர் தலைமை தாங்கினார். ஓவியர் கார்முகிலன் வரவேற்றார். கால்நடை துறை இணை இயக்குனர், பரிசுகள் வழங்கினார். கவிதா மோகனம், பேராசிரியை சுஜித்ரா, பிரியதர்ஷினி வாழ்த்துரை வழங்கினர். ஓவியர் எமில் நோக்க உரையாற்றினார். ஓவியர்கள் ராமலிங்கம், ஷர்மிளா உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வரதராஜன், ஆரோக்கிய மேரி ,ஜெயலட்சுமி செய்திருந்தனர். ஓவியர் வசந்தி நன்றி கூறினார்.