உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு

பாகூர் : குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், பெற்றோர், ஆசிரியர், மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் கோமதி தலைமை தாங்கினார். ஆசிரியர் இருசப்பன் வரவேற்றார். ஆசிரியர் வெற்றிவேல் 'இன்றைய தேர்வு முறைகளும், பெற்றோர், ஆசிரியர், மாணவர் கூட்டு முயற்சியும்' எனும் தலைப்பில் நோக்கவுரையாற்றினார். மாணவர்கள் வருகை, வீட்டுப் பாடம், உணவு முறை குறித்து ஆசிரியர்கள் கோமளா, சங்கரதேவி, தேவி, ரேவதி, குபேரன் கருத்துரையாற்றினர். பாலமுரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ