உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார்லிமெண்ட் நிலைக்குழுவினர் அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம்

பார்லிமெண்ட் நிலைக்குழுவினர் அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம்

 புதுச்சேரி: பார்லிமெண்ட் நிலைக்குழு எம்.பி.,க்கள் நேற்று அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம் செய்தனர். முகுல் வாஸ்னிக், பிரிஜ்மோகன் அகர்வால், காமாக்யா பிரசாத் தாசா, ரேகா சர்மா, ரவீந்திரன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட பார்லிமெண்ட் நிலைக்குழு எம்.பி.,க்கள்  இரண்டு நாள் பயணமாக கடந்த 13ம் தேதி புதுச்சேரி வந்தனர்.    அன்று இரவு புதுச்சேரி, தனியார் நட்சத்திர விடுதியில், தங்கியிருந்த எம்.பி.,க்கள் குழுவினர், நேற்று முன்தினம் ஆரோவில் சென்றனர்.  அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழுவினர் மீண்டும் இரவு புதுச்சேரியில் தங்கினர். பின் நேற்று காலை, அவர்கள் அரவிந்தர் ஆசிரமம் சென்றனர். அங்குள்ள பள்ளியில், ஆய்வு மேற்கொண்ட குழுவினர், ஆசிரமத்திற்குள் சென்று தரிசனம் செய்தனர். பின் நேற்று மதியம் சாரம் வெங்கடேஸ்வரா நகரில், உள்ள மகளிர் ஆலோசனை மையத்தில், ஆய்வு செய்தனர். தொடர்ந்து  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்ககம், மற்றும் பொதுத் துறை வங்கிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில், மகளிர் முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகள், சி.எஸ்.ஆர்.,  நிதி மூலம் மகளிர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி