மேலும் செய்திகள்
ஆட்டோவில் தவற விட்ட 9 பவுன் நகை ஒப்படைப்பு
19-May-2026
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போனை, கடலோர காவல்படையினர், உரியவரிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி கடற்கரை பகுதியில் லைப்கார்ட் ரமேஷ் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, காலை 11 மணிக்கு பழைய கோர்ட் வளாகம் எதிரே உள்ள கடற்கரை பகுதியில் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைகண்ட ரமேஷ் மொபைல் போனை எடுத்து, கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் தியாகராஜனிடம் ஒப்படைந்தார். இதையடுத்து, கடலோர காவல்படையினர், மொபைல் போன் யாருடையது என விசாரணை நடத்தினர். அதில், ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருடையது என்பதும், அவர் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தபோது, மொபைல் போனை தவறவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மகாலட்சுமியை கடலோர காவல் நிலையத்திற்கு வரவழைத்து, மொபைல் போனை கண்டு எடுத்த லைப்கார்ட் ரமேஷ் மூலமாகவே, உரியவரிடம் போனை போலீசார் ஒப்படைத்தனர். மேலும், ரமேஷின் நேர்மையை பாராட்டி, இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
19-May-2026