மேலும் செய்திகள்
விநாயகர் சிலை விசர்ஜனம் வழிகாட்டு முறை வெளியீடு
29-Aug-2024
புதுச்சேரி: விநாயகர் சிலைகளை உருவாக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுக்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு; விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றால் செய்ய வேண்டும்.சிலைகளுக்கு மலர் ஆபரணங்கள் செய்யலாம். சிலைகளை ஒளிர செய்வதற்கு மர பிசினை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை உருவாக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான நீர் சார்ந்த மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்கள் பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்துவதற்கு, எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும். அலங்கார ஆடைகளுக்கு வண்ணம் சேர்ப்பதற்கு பூக்கள், மரப்பட்டைகள், மகரந்தங்கள், இலைகள், வேர்கள், விதைகள், பழங்கள் மற்றும் வண்ண பாறைகள் ஆகியவற்றில் இருந்து இயற்கையாக தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள், உள்ளாட்சி துறையில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தில் முன்பே பதிவு செய்ய வேண்டும். பாக்கு, வாழை, ஆலம், சால் இலைகள், மக்கும் காகிதக்கோப்பைகள், தட்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றை பிரசாதம் விநியோகத்திற்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். காகித்தால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் மற்றும் மக்கும் பொருட்கள் போன்ற வழிபாட்டு பொருட்களை சிலை மூழ்குவதற்கு முன்பு அகற்றப்பட்டு, நியமிக்கப்பட்ட சிலை மூழ்கும் இடத்தில் வழங்கப்பட்ட வண்ணக்குறியிடப்பட்ட தொட்டிகளில் பிரித்து போட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
29-Aug-2024