உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடிப்படைத் திறன் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு

அடிப்படைத் திறன் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி: வட்டம் 2 பள்ளிகளுக்கு இடையே அடிப்படை மொழித்திறன், கணிதத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் வகையில், வட்டம் 2ல் உள்ள 32 பள்ளிகளுக்கு இடையேயான அடிப்படை மொழித்திறன், கணிதத் திறன் போட்டிகள் இந்திரா நகர் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, துணை ஆய்வாளர் செல்வி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில், வட்டம் 2ல் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை