உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளி  முதியோருக்கு உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளி  முதியோருக்கு உபகரணங்கள் வழங்கல்

புதுச்சேரி: பிரதமரின், 'திவ்யஷா கேந்த்ரா' என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம், காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவையான உபகரணங்கள் தங்கு தடையின்றி, கிடைக்கவும் தேவையான மருத்துவ வசதிகளை பெறவும், காமராஜர் சாலையில் உள்ள சிறப்பு பள்ளியில் அலுவலகத்தை அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்தார்.மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு முட நீக்கு சாதனங்கள், காது கேட்கும் கருவிகள், மாற்றுத்திறனாளர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்களை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.சமூக நலத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணகி மற்றும் அலிம்கோ நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !