உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்தடையால் பொதுமக்கள் அவதி

மின்தடையால் பொதுமக்கள் அவதி

புதுச்சேரி:புதுச்சேரி நேருவீதி, மிஷன் வீதிகளில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து நகரப்பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் உள்ள டிராண்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக நகரின் முக்கிய பகுதியான நேரு வீதி, மிஷன் வீதயில் நேற்று மாலை 6.30 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. பின் இரவு 8.45 மணிக்கு மின் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை