நர்சிங், பாராமெடிக்கல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வெளியீடு
புதுச்சேரி: நர்சிங், பாராமெடிக்கல் கல்லுாரிகளில் இந்தாண்டு நிரப்பப்பட உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை இடங்கள் உயர்கல்வித் துறை நேற்றுமுன்தினம் வெளியிட்டது.இரண்டாம் கட்டமாக பி.எஸ்.சி., நர்சிங், பாராமெடிக்கல்லுாரிகளில் இந்தாண்டு நிரப்பப்பட உள்ள இடங்கள் பற்றிய விபரங்களை உயர் கல்வி துறை சென்டாக் மூலம் வெளியிட்டுள்ளது.தனியார் நர்சிங் கல்லுாரிகளை பொருத்தவரை 350 சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்பட உள்ளது. மணக்குள விநாயகர்-50, இந்திராணி-50, சபரி-25, ஈஸ்ட் கோஸ்ட்--30, பிம்ஸ்-50, ஏ.ஜி., பத்மாவதி-30, லட்சுமிநாராயணா--30, இமாகுலேட்--25 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன.இந்த 350 சீட்டுகளும் பொது-175, ஓ.பி.சி.,-38, எம்.பி.சி.,-63, எஸ்.சி.,-56, முஸ்லீம்-7, மீனவர்-7, எஸ்.டி.,-2 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. உள்ஒதுக்கீடாக விடுதலை போராட்ட வீரர்-14, மாற்றுதிறனாளி-18, முன்னாள் ராணுவ வீரர்-11, விளையாட்டு வீரர்-4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.