ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை
புதுச்சேரி: ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க ரேட் கார்டு முறையை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு; புதுச்சேரியில் ஆட்டோவில் மீட்டரை பயன்படுத்தாமல் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து சட்டத்தின் கீழ் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ளது. ஆட்டே கட்டணத்தை வட மாநிலத்தில் உள்ளது போல், ரேட் கார்டு முறையை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.