உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி: புதுச்சேரி 45 அடி சாலையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, 45 அடி சாலை, ஆந்திரா மகா சபா அருகே நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்து கத்தியுடன் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், குமரகுருப்பள்ளத்தை சேர்ந்த ஜான் லுாயிஸ் மகன் சத்யராஜ், 38; என்பதும், ரவுடியான அவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உட்பட பல பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.  இதையடுத்து, சத்யராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை