சாமுராய் ஸ்வார்ட் கராத்தே பயிற்சி
காரைக்கால்: காரைக்காலில் வி.ஆர்.எஸ்., மார்ஷியர் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களுக்கு சாமுராய் ஸ்வார்ட் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் இண்டர் நேஷனல் வி.ஆர்.எஸ்., மார்ஷியர் ஆர்ட்ஸ் அகாடமியில் மாணவர்களுக்கு சாமுராய் ஸ்வார்ட் கராத்தே பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஜாப்பனீஸ் மாஸ்டர் யூகி யோன்யாமா அகாடமியைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாமுராய் ஸ்வார்ட் ஆர்ட் தேசிய தலைவரான குமார் மற்றும் தேசிய செயலாளர் ஷிஹான் சிவாஜி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.