உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மவுண்ட் பார்க் பள்ளியில் ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு

மவுண்ட் பார்க் பள்ளியில் ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு

தியாகதுருகம் : தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் மேல் நிலை வகுப்பு சேர்க்கையில் தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதே போல் இந்தாண்டும் 25 பேருக்கு கல்வி, விடுதி, நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் 100 சதவீதம், கல்வி கட்டணம் 100 சதவீதம் 50 பேருக்கு, 50 சதவீதம் 50 பேருக்கு, 25 சதவீதம் 50 பேருக்கு என, மொத்தம் 175 மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது.இதற்கான தகுதி தேர்வு நேற்று நடந்தது. தாளாளர் மணிமாறன் தலைமையில் முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் மேற்பார்வையில் காலை 10:30 மற்றும் பிற்பகல் 2:30 ஆகிய இரு வேளை தேர்வு நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 1,020 மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வில் பங்கேற்றனர். இத்தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சிறப்பிடம் பெறும் 175 மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. தகுதி தேர்வுக்கான முடிவுகள் அந்த மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை