உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தெருநாய்கள் தொல்லை பொதுமக்கள் அச்சம்

தெருநாய்கள் தொல்லை பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரி: தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  புதுச்சேரியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிள்ளைத்தோட்டம் பகுதியில் நாய்கள் கூட்டமாகத் திரிவதால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். ​பிள்ளைத்தோட்டம், சின்ன சந்து தெருவில், கடந்த சில நாட்களாக நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கூட்டமாகத் திரியும் இந்த நாய்கள், அவ்வழியாகச் செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று அச்சுறுத்துகின்றன. இதேபோல், ஆரியப்பாளையத்தில் இருந்து சேந்தநத்தம் செல்லும் வழியில் மங்களபுரி நகரில், தெருநாய்கள் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்ல அச்சப்படுகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள் வீட்டின் அருகிலேயே விளையாடுவது வழக்கம். ஆனால், தெருக்களில் நாய்கள் ஆக்ரோஷமாக சுற்றி திரிவதால், குழந்தைகளை வெளியே அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை