உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவரின் பைக் திருட்டு

மாணவரின் பைக் திருட்டு

  புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், மாணவரின் பைக் திருடு போனது குறித்து டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியைச் சேர்ந்தவர் சலீம் மகன் முகமதுசனா, 21. இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 30ம் தேதி, காலை 8.30 மணிக்கு கல்லுாரி வாசலில் தனது ஸ்பிளண்டர் பைக்கை (கே.எல்.11. பி. 5269) நிறுத்தி விட்டு சென்றார். பின் வகுப்பு முடிந்து, மதியம் 1 மணிக்கு வந்து பார்த்த போது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை