உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சட்டசபையை முடக்குவோம் தமிழக மாஜி அமைச்சர் சம்பத் எச்சரிக்கை

புதுச்சேரி சட்டசபையை முடக்குவோம் தமிழக மாஜி அமைச்சர் சம்பத் எச்சரிக்கை

புதுச்சேரி : ''மின் கட்டணத்தை குறைக்காவிட்டால், ஒரு லட்சம் பேரை திரட்டி புதுச்சேரி சட்டசபையை முடக்குவோம்'' என தமிழக முன்னாள் அமைச்சர் எம்.பி., சம்பத் கூறினார்.புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தை மாலையில் பழச்சாறு கொடுத்து தமிழக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் முடித்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:மின் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் கடலுாரில் இருந்து நானும், விழுப்புரத்தில் இருந்து சண்முகம் தலைமையில் ஒரு லட்சம் பேரை ஒன்று திரட்டி தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில் புதுச்சேரி சட்டசபையை முடக்குவோம். புதுச்சேரியில் மின் கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். லாபத்தில் செல்லக்கூடிய புதுச்சேரி மின் துறையை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. புதுச்சேரியில் மூன்று ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. காரணம் என்.ஆர்.காங்., - பா.ஜ., உறவு எண்ணெய் தண்ணீர் போல உள்ளது.தமிழக முதல்வர் வெறும் போட்டோ ஷூட் தான் நடத்துகிறார். பிள்ளை, பேரன் என குடும்ப ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. எந்த அமைச்சரும் செயல்படவில்லை. 2026 இல் தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். இன்னும் இருபது மாதங்கள்தான். புதுச்சேரியிலும் என்.ஆர்- காங்., பா.ஜ., ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.பா.ஜ., கூட்டணி அரசிடம் பேசி சென்னை--புதுச்சேரி இடையே வெளிப்புற வழியாக ரயில் சேவையை புதுச்சேரி முதல்வர் துவங்கியிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை