உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருண்டு கிடக்கும் ஹைலிபேடு மைதானம் ஹைமாஸ் விளக்குகள் அமைத்தும் பயனில்லை கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுப்பார்களா....

இருண்டு கிடக்கும் ஹைலிபேடு மைதானம் ஹைமாஸ் விளக்குகள் அமைத்தும் பயனில்லை கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுப்பார்களா....

புதுச்சேரி : ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்ளும் லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம் இருள் சூழ்ந்து சமூக விரோதிகள் பிடியில் சிக்கியுள்ளது. புதிதாக அமைத்துள்ள ைஹமாஸ் விளக்குகளை ஒளிர செய்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் தினமும் காலை மற்றும் மாலையில் ஆயிரக்கணக்கானோர் 'வாக்கிங்' செல்கின்றனர். மேலும், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் 'ஸ்கேட்டிங்' பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், ெஹலிபேடு மைதானம் வெளிச்சமின்றி, இருண்டு கிடக்கின்றது. இத்தனைக்கும் இந்த மைதானத்தில் இரு இடங்களில் பொதுப்பணித் துறை மூலம் ைஹமாஸ் விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு மின் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.மின் இணைப்பு கொடுத்தால் இந்த ைஹமாஸ் விளக்குகளை யார் பராமரிப்பது என்பதில் உழவர்கரை நகராட்சிக்கும், பொதுப்பணித்துறைக்கும் பல மாதமாக பஞ்சாயத்து நடந்து வருகின்றது. இதனால், ெஹலிபேடு மைதானம் இருளில் மூழ்கி, சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. மாலையில் இருள் சூழ்ந்ததும் கும்பலாக அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள், மது பாட்டீல்களை உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியாக 'வாக்கிங்' செல்ல மக்கள் அச்சமடைகின்றனர்.இருள் சூழ்ந்துள்ள இப்பகுதியில், கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. ஆதலால், பொதுப்பணித் துறை- உழவர்கரை நகராட்சி இடையே உள்ள பஞ்சாயத்திற்கு முடிவு கட்டி ைஹமாஸ் விளக்குகளை ஒளிரவிட கவர்னர், முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ