உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம் 

புதுச்சேரி: கடைக்கு சென்ற இளம்பெண் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார், வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் அனிதா, 18; பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் வீட்டில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். அதையடுத்து அனிதா கடைக்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை