உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘மாஜி’ அமைச்சர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

‘மாஜி’ அமைச்சர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.எல்.ஏ., மீதான அவதுாறு வழக்கு விசராணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. வானுார் தாலுகா, ஆரோவில் பஸ் நிலையம் எதிரே கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 10ம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் கடந்த 2023ம் ஆண்டு மே 1ம் தேதியும் அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.எல்.ஏ., தமிழக அரசையும், அப்போதைய முதல்வர் ஸ்டாலினை பற்றியும் அவதுாறாக பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த இரு வழக்குகளும் நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சண்முகம் தரப்பில் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும் படியும் மனுதாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி, வழக்குகளின் விசாரணையை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை