உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டச்சு தேர்வு; 4,000 பேர் பங்கேற்பு

தட்டச்சு தேர்வு; 4,000 பேர் பங்கேற்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நடந்த தமிழ், ஆங்கிலம், உயர் வேக தட்டச்சு தேர்வில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் தமிழ், ஆங்கிலம், உயர்வேக தட்டச்சு தேர்வுகள் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதையொட்டி, புதுச்சேரியில் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, வில்லியனூர் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பாலிடெக்னிக், சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஆகிய நான்கு இடங்களில் தட்டச்சு தேர்வுகள் நேற்று நடந்தன. பிரி ஜூனியர், ஜூனியர், சீனியர், ஹை ஸ்பீடு ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவிகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ், ஆங்கிலம் இரண்டாம் பேப்பருக்கு ஜூனியருக்கு ஒரு மணி நேரமும், சீனியருக்கு 45 நிமிடம் தேர்வு நடந்தது. முதல் பேப்பர் (ஹை ஸ்பீடு) உயர் வேகத்திற்கு பத்து நிமிடங்கள் தேர்வர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் நாளாக இன்றும் தட்டச்சு தேர்வு நடப்பதால் இரண்டு நாட்களில் மொத்தமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ