உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உத்தரகண்ட் நிலச்சரிவில் சாலைகள் துண்டிப்பு ; சிதம்பரம் பக்தர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்

உத்தரகண்ட் நிலச்சரிவில் சாலைகள் துண்டிப்பு ; சிதம்பரம் பக்தர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்

சிதம்பரம், : உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியபோது மீட்கப்பட்ட சிதம்பரம் பக்தர்கள், நேற்று வேன் மூலம் டில்லி சென்றடைந்தனர். அவர்கள், ரயில் மூலம் சென்னை வர உள்ளனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த கனகராஜ் தலைமையில், கடந்த 1ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேர், தரிசனம் முடிந்து திரும்பும்போது, மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒரு கிராமத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பது குறித்து, தகவல் அறிந்த வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில், கடலுர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உத்தரகண்ட் மாநில கலெக்டர் மற்றும் , டில்லி அதிகாரிகளுடன் பேசி, பக்தர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.அதையடுத்து, புத்தி என்ற பகுதியில் 4 நாட்கள் சிக்கியிருந்த 30 பேரும், நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பித்தோர்கர் என்ற பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை 2 வேன் மூலம் டில்லிக்கு புறப்பட்டனர்.வழியில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக, சில சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மாற்று சாலை வழியாக இரவு டில்லி வந்து சேர்ந்தனர். தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில், அங்கிருந்து இன்று மாலை ரயில் மூலம், சென்னை புறப்படுகின்றனர்.நாளை மாலை சென்னை வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ