அசோக் நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் ‘கட்’
புதுச்சேரி: புதுச்சேரி அசோக் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் வரும் 22 மற்றும் 23ம் தேதி இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. லாஸ்பேட்டை குடிநீர் பிரிவு அசோக் நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணியால், வரும் 22 மற்றும் 23ம் தேதி ஆகிய இரு நாட்களில் மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை அசோக் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.