உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூச்சு திணறி பெண் பலி

மூச்சு திணறி பெண் பலி

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நெசவாளர் நகர், கலைமகள் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம், 52; ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி, 50. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. லோகேஸ்வரிக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து, சளி, இருமல் இருந்து வந்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு லோகேஸ்வரிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து லோகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.  புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி