உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே மின் கம்பத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சின்னதுரை, 31; கூலித் தொழிலாளி. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் விநியோகம் பாதித்தது. நேற்று காலை 11:30, மணிக்கு, மின் கம்பத்தில் பழுது நீக்குவதற்காக சின்னதுரை கம்பத்தில் ஏறினார். அப்போது அவரது தோளில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே தொங்கிய நிலையில் இறந்தார். புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை