மேலும் செய்திகள்
ஸ்டாலின் தோல்வி; எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி?
05-May-2026
புதுச்சேரி: காங்., தலைவர் வைத்திலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., நிர்வாகிகள் 12 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்., கட்சி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று வைத்திலிங்கம் எம்.பி., தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் ஒருதரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வைத்திலிங்கம் எம்.பி.,யும் தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார். இதற்கிடையில் காங் கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய காங்., நிர்வாகிகள் 12 பேர் திடீரென கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில், பொதுச் செயலாளர் வேல்முருகன், செயலாளர் சரவணன் உள்ளிட்டோரும் அடங்கும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்., நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 6ம் தேதி, புதுச்சேரி காங்., தலைமை அலுவலக வளாகத்தில் கட்சியின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை மீறும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கட்சி தலைவர் பதவி விலக வேண்டும் என கோஷம் போட்டது, கட்சியின் ஒற்றுமை மற்றும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே கட்சி கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு முதல் கட்ட ஒழுங்கற்று நடவடிக்கையாக தங்கள் தற்போது கட்சியில் வசித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறீர்கள். இக்கடிதம் பெற்ற நாள் முதல் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் தவறினால், அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாகிகள் கூறுகையில் காங்., படுதோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் மாநில தலைவரை ராஜினாமா செய்யும்படி கோரியிருந்தோம். காங்., தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கத்திற்கு எங்களை சஸ்பெண்ட் செய்ய எந்த அதிகாரமும் இல்லை. எங்களை நியமித்தது அகில இந்திய காங்., தலைமை தான். எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையும் அகில இந்திய தலைமைக்கு மட்டும் தான் உள்ளது என தெரிவித்தனர்.
05-May-2026