உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார், காமராஜர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். இதில், பெசன்ட் நகர் இர்ஷத் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது அபூபக்கர் சித்திக்,37; அவரது நண்பர் ஹாஜா பாரூக்,47; ஆகியோர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரிந்தது. உடன், 2 பேரையும் போலீசார் கைது செய்து, 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை