உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டா கத்தி வைத்து மிரட்டிய 2 பேர் கைது

பட்டா கத்தி வைத்து மிரட்டிய 2 பேர் கைது

அரியாங்குப்பம், : பொதுமக்களை பட்டா கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் இரண்டு பேர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை, பட்டா கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில், பழைய பூரணாங்குப்பம் விமல்,27; முதலியார்பேட்டை ஆனந்த், 26; என தெரியவந்தது. இவர்கள், இருவர், மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரையும் கைது செய்தனர். பின், கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை