2 பேரிடம் ரூ. 13 ஆயிரம் மோசடி
புதுச்சேரி:புதுச்சேரியில் 2 பேரிடம் சைபர் மோசடி கும்பல் 13 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளது. லாஸ்பேட்டையைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அதில், வங்கி கணக்கின் கே.ஒய்.சி.,யை புதுப்பிக்க ஏ.டி.எம்., கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை கேட்டுள்ளார். இதை நம்பிய அவர், மர்மநபருக்கு அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரது வங்கியில் இருந்து 11 ஆயிரத்து 500 ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது. இதேபோல், லாஸ்பேட்டைச் சேர்ந்த பெண் 2 ஆயிரம் என, 2 பேர் 13 ஆயிரத்து 500 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.